2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலை பெற்ற பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 04 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பங்களாதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெளன்ட் மகட்டரேயில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது 2 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே 78 ஓட்டங்களுடன் மஹ்முடுல் ஹஸன் ஜோயை 78 ஓட்டங்களுடன் நீல் வக்னரிடம் இழந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் ட்ரெண்ட் போல்டிடம் முஷ்பிக்கூர் ரஹீமும் வீழ்ந்தபோதும், அணித்தலைவர் மொமினுல் ஹக், லிட்டன் தாஸின் இணைப்பில் இனிங்ஸை பங்களாதேஷ் கட்டியெழுப்பியது.

பின்னர் 88, 86 ஓட்டங்களுடன் சிறிய இடைவேளைகளில் ஹக்கும், தாஸும் போல்டிடம் வீழ்ந்த நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 401 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், மெஹிடி ஹஸன் மிராஸ் 20, யாசிர் அலி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

நியூசிலாந்து: 328/10 (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே 122, ஹென்றி நிக்கொல்ஸ் 75, வில் யங்க் 52, றொஸ் டெய்லர் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 3/69, மெஹிடி ஹஸன் மிராஸ் 3/86, மொமினுல் ஹக் 2/6, எபொடொட் ஹொஸைன் 1/75)

பங்களாதேஷ்: 401/6 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 88, லிட்டன் தாஸ் 86, மஹ்முடுல் ஹஸன் றோய் 78, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 3/61, நீல் வக்னர் 3/98)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X