2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 03 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லோர்ட்ஸில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நேற்றைய முதல் நாளில் நியூசிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். நியூசிலாந்து சார்பாக டெவோன் கொன்வே டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட நிலையில், இங்கிலாந்து சார்பாக ஜேம்ஸ் பிறேஸி, ஒலி றொபின்ஸன் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நிதானமாக ஆரம்பித்த நியூசிலாந்து, குறிப்பிட்ட நேரத்தில் டொம் லேதமை றொபின்ஸனிடம் பறிகொடுத்தது. பின்னர் வந்த வில்லியம்ஸன், றொஸ் டெய்லர் ஆகியோரும் குறிப்பிட இடைவெளிகளில் ஜேம்ஸ் அன்டர்சன், றொபின்ஸனிடம் வீழ்ந்தனர்.

எவ்வாறெனினும் கொன்வேயின் ஆட்டமிழக்காத 136, ஹென்றி நிக்கொல்ஸின் ஆட்டமிழக்காத 46 ஓட்டங்களுடன் நேற்றைய முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .