2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.

இந்நிலையில் மார்க் சப்மனை இந்தியாவுக்கெதிரான தொடருக்கான குழாமில் நியூசிலாந்து இணைத்துள்ளது.

இதேவேளை மிஷெல் பிறேஸ்வெல் முதலாவது டெஸ்டுக்கு மாத்திரம் இருப்பார் என்பதோடு, பின்னர் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்புக்காக நியூசிலாந்து செல்லவுள்ளார்.

பிறேஸ்வெல்லின் பிரதியீடாக இரண்டாவது, மூன்றாவது டெஸ்டுகளுக்கு குழாமில் இஷ் சோதி இணையவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .