2025 மே 19, திங்கட்கிழமை

முதல் நாள் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 04 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதாலவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் முடிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மொஹாலியில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய முதல் நாள் முடிவில், முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, தமது முதலாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், இரவீந்திர ஜடேஜா 45, இரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, றிஷப் பண்ட் 96, ஹனும விஹாரி 58, விராட் கோலி 45, மாயங்க் அகர்வால் 33, அணித்தலைவர் றோஹித் ஷர்மா 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 2, சுரங்க லக்மால், தனஞ்சய டி சில்வா, விஷ்வ பெர்ணான்டோ, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X