2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

முத்தரப்புத் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெற்றவுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக தங்களது அணிகளை இறுதி செய்து கொள்ள மற்றும் பரிசோதிக்க இத்தொடர் சிறந்த வாய்ப்பாக அமைகின்றது.

ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான் போர்முக்குத் திரும்ப வேண்டியுள்ளதுடன், இப்ராஹிம் ஸட்ரானும் தன்னை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் நிரூபித்துக் காட்ட வேண்டியுள்ளார்.

மறுபக்கமாக பக்கர் ஸமனின் மீள்வருகையானது பாகிஸ்தானுக்கு பலத்தையளிப்பதுடன் அவருடன் இணைந்து குஷ்டில் ஷா ஆகியோர் தாக்கம் செலுத்தக்கூடிய இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .