2025 மே 21, புதன்கிழமை

மும்பையை வென்றது டெல்லி கப்பிடல்ஸ்

Freelancer   / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜவில் இடம்பெற்ற இந்தியன் பிறீமியர் லீக்கின் இன்று மாலை இடம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. 

துடுப்பாட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 33(26), குயின்டன் டி கொக் 19(18) ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில் அக்ஷார் பட்டேல் (3), ஆவேஷ் கான் (3) விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

130 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 33(33), ரிஷப் பண்ட் 26(22), ரவிச்சந்திரன் அஷ்வின் 20(26) ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் (1) நதன் கூட்டர் நீல் (1)  விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக அக்ஷார் பட்டேல் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X