Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலாந்தர் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, ஒன்பதாமிடத்திலிருந்து வேர்ணன் பிலாந்தர் ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளரான பற் கமின்ஸ், 18ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

இதேவேளை, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 15ஆம் இடத்திலிருந்த தென்னாபிரிக்காவின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஏய்டன் மர்க்ரம், அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 189 ஓட்டங்களைப் பெற்றதையடுத்து ஆறு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், நான்காமிடத்திலிருத ஜோ றூட், நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பெற்ற 91 ஓட்டங்களையடுத்து ஒரு இடம் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் வரிசை பின்வருமாறு,
இந்நிலையி, இங்கிலாந்துகெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றதையடுத்தும், தென்னாபிர்க்காவுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என அவுஸ்திரேலியா இழந்ததையடுத்தும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்த அவுஸ்திரேலியாவை தசம புள்ளிகள் வித்தியாசத்தில் நான்காமிடத்துக்கு பின்தள்ளி மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது.
அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago