Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் திலக் வர்மா முன்னேறியுள்ளார்.
ஓமான், பாகிஸ்தானுக்கெதிரான ஆசியக் கிண்ணப் போட்டிகளில் 29, 30 ஓட்டங்களை வர்மா பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை ஆசியக் கிண்ணத்தின் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கைக்கெதிரான போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மட், 16ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர ஆசியக் கிண்ணத்தின் பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கிடையிலான போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கெதிரான ஆசியக் கிண்ணப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் முஸ்தபிசூர் ரஹ்மான், 15ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago