Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இலங்கையின் மகேஷ் தீக்ஷன முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இப்போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்குறித்த போட்டியில் 39 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் பதும் நிஸங்க, துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 119 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் றிஷப் பண்ட் துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago