2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய மொஹமட் சிராஜ்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 19 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு, இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஜ் முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளிலும் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே 18ஆம் இடத்திலிருந்து 15 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட், 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. மொஹமட் சிராஜ், 4. மிற்செல் ஸ்டார்க், 5. ரஷீட் கான், 6. அடம் ஸாம்பா, 7. ஷகிப் அல் ஹஸன், 8. மற் ஹென்றி, 9. ஷகீன் ஷா அஃப்ரடி, 10. முஸ்தபிசூர் ரஹ்மான்.

இதேவேளை, குறித்த இரண்டு போட்டிகளிலும் 170 ஓட்டங்களைப் பெற்ற விராட் கோலி, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. றஸி வான் டர் டுஸன், 3. குயின்டன் டி கொக், 4. விராட் கோலி, 5. டேவிட் வோணர், 6. இமாம்-உல்-ஹக், 7. கேன் வில்லியம்ஸன், 8. ஸ்டீவ் ஸ்மித், 9. ஜொனி பெயார்ஸ்டோ, 10. றோஹித் ஷர்மா.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. மெஹெடி ஹஸன், 4. ரஷீட் கான், 5. மிற்செல் சான்ட்னெர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .