Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷுக்கெதிரான ஆசியக் கிண்ணப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை கான் அடைந்துள்ளார்.
இதேவேளை குறித்த போட்டியில் 3 விக்கெட்டுகளையும், இலங்கைக்கெதிரான ஆசியக் கிண்ணப் போட்டியில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான், 16ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறை வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 103 ஓட்டங்களைப் பெற்றதுடன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்கள் பின்வருமாறு,
இதேவேளை குறித்த டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago