Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 01 , பி.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு பென் ஸ்டோக்ஸ் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 141 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
மேற்கூறப்பட்ட போட்டியில் 54 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் றிஷப் பண்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
இப்போட்டியில் 94 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் பென் டக்கெட், 15ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி 3 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 45 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் றொமாரியோ ஷெப்பர்ட், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான் இறுதி 4 போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நாதன் எலிஸ், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 15ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இறுதி 4 போட்டிகளில் 154 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ஜொஸ் இங்லிஸ், 15ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
39 minute ago
40 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
40 minute ago
49 minute ago
57 minute ago