2025 ஜூலை 16, புதன்கிழமை

மூன்றாவது சுற்றில் நடால், வொஸ்னியாக்கி

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோர் மூன்றாவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

கடந்தாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி வரை வந்த ரபேல் நடால், 6-3, 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் லியனார்டோ மேயரை வென்றிருந்தார்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான, பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-6, 6-2, 6-4, 0-6, 8-6 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மக்கென்ஸி மக்டொனால்டை மிகவும் போராடி வென்று மூன்றாவது சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தார்.

உலகின் ஆறாம் நிலை வீரரான, குரோஷியாவின் மரின் சிலிச், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் போர்த்துக்கல்லின் ஜோஸா சூஸாவை வென்று மூன்றாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

கரோலின் வொஸ்னியாக்கி, 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஜனா பெட்டை வென்றிருந்தார்.

உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஜெலினா ஒஸ்டபென்கோ, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் டுவான் யிங்ஜியாங்கை வென்று மூன்றாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் ஒலிவியா றொகொவ்ஸ்காவை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்ற உக்ரேனின் 15 வயதான மார்ட்டா கொஸ்ட்யுக், 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிரான்ட் ஸ்லாம் தொடரொன்றின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனையாக தனது பெயரைப் பதிவுசெய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .