Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ள நிலையில் தொடரில் முன்னிலையை இப்போட்டியில் எந்த அணி பெறும் என்பது தீர்மானிக்கும்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷ்ரேயாஸ் ஐயர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சஃப்ராஸ் கான் அணியில் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுவதோடு, முகேஷ் குமாரை மொஹமட் சிராஜ் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இரவீந்திர ஜடேஜா போட்டியில் விளையாடும் உடற்றகுதியைப் பெற்றால் அக்ஸர் பட்டேலைப் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக இங்கிலாந்தானது கடந்த போட்டியில் விளையாடிய ஷொய்ப் பஷிரை மார்க் வூட் மூலம் பிரதியிட்டுள்ளது.
இப்போட்டிக்கான ஆடுகளமானது ஓரளவுக்கு துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
31 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
5 hours ago
6 hours ago