Shanmugan Murugavel / 2020 நவம்பர் 19 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் நான்காம்நிலை வீரரான டனில் மெட்வெடெவ்விடம் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தோல்வியடைந்துள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற ரஷ்யாவின் மெட்வெடெவ்வுடனான போட்டியில் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் சேர்பியாவின் ஜோக்கோவிச் தோல்வியடைந்தார்.
அந்தவகையில், இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் அரையிறுதிப் போட்டிக்கு மெட்வெடெவ் தகுதிபெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மன்னை எதிர்கொண்ட ஏழாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றிருந்தார்.
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago