Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெர்சிடிஸுடன் 2021 பருவகாலத்துக்காக புதியதொரு ஓராண்டு ஒப்பந்தமொன்றை, நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் கைச்சாத்திட்டுள்ளார்.
பிரித்தானிய ஓட்டுநரான ஹமில்டனின் மெர்சிடிஸுடனான ஒப்பந்தமானது கடந்தாண்டு முடிவடைந்தபோதும், தற்போது ஒன்பதாவது பருவகாலமொன்றுக்காக மெர்சிடீஸ் அணிக்காக காரைச் செலுத்தவுள்ளார்.
ஜேர்மனிய ஓட்டுநரான மைக்கல் ஷுமாக்கரின் போர்மியுலா வண்ணில் அதிக பட்டங்களாக ஏழு பட்டங்களைக் கைப்பற்றியதை கடந்தாண்டு 36 வயதான ஹமில்டன் சமப்படுத்தியதுடன், அவரின் போர்மியுலா வண்ணில் அதிகூடிய வெற்றிகள் சாதனையை முறியடித்திருந்தார்.
இந்நிலையில், ஹமில்டனின் ஒப்பந்தமொன்றின் பகுதியொன்றாக போர்மியுலா வண்ணில் மேலும் பல்வகைமை, உள்ளடக்கத்தை ஏற்படுத்துவதற்காக அவருடன் மெர்சிடீஸ் பணியாற்றவுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago