Editorial / 2025 ஜூலை 18 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெயின் வீரர் லாமின் யாமல், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு மெஸ்ஸியின் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
கால்பந்து உலகின் வருங்கால நட்சத்திரமாக அறியப்படுகிறார் 18 வயதான லாமின் யாமல். அதற்கான தகுதியை கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் அவர் நிரூபித்துள்ளார். 2023 சீசன் முதல் பார்சிலோனா சீனியர் அணியில் அவர் விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணிக்காக 18 கோல்கள் பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 25 அசிஸ்ட்களை செய்து உதவியுள்ளார். லா லிகா, கோபா தெல் ரே, ஸ்பானிஷ் சூப்பர் லீக் உள்ளிட்ட உள்நாட்டு தொடரில் அவர் இடம்பெற்ற பார்சிலோனா அணி நடப்பு சீசனில் பட்டம் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக்ஸ் தொடரிலும் அரையிறுதி வரை அந்த அணி முன்னேறி இருந்தது.
மறுபக்கம் பார்சிலோனா அணிக்காக 2004 முதல் 2021 வரையில் மெஸ்ஸி விளையாடி இருந்தார். அந்த அணிக்காக 474 கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். பல்வேறு கோப்பைகளை பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி வென்று கொடுத்துள்ளார். 2021-க்கு பிறகு பிஎஸ்ஜி அணியில் விளையாடி இருந்தார். இப்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா மட்டுமல்லாது மற்ற கிளப் அணிகள் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக 10-ம் எண் ஜெர்ஸியை அணிந்து மெஸ்ஸி விளையாடி வருகிறார்.
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025