Editorial / 2018 ஒக்டோபர் 14 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது. ஏற்கெனவே முதலாவது டெஸ்டில் வென்றிருந்த இந்தியா, ஹைதரபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் 10 விக்கெட்டுகளால் வென்றதையடுத்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றொஸ்டன் சேஸ் 106, அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 52, ஷை ஹோப் 36, ஷேன் டெளரிச் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 6, குல்தீப் யாதவ் 3, இரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 367 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றிஷப் பண்ட் 92, அஜின்கியா ரஹானே 80, பிறித்திவி ஷா 70, அணித்தலைவர் விராத் கோலி 45, இரவிச்சந்திரன் அஷ்வின் 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேசன் ஹோல்டர் 5, ஷனொன் கப்ரியல் 3, ஜோமெல் வொரிக்கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், 56 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள், சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், சுனில் அம்பிறிஸ் 38, ஷை ஹோப் 28, ஜேசன் ஹோல்டர் 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 4, இரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அந்தவகையில், 72 ஓட்டங்களை தமது இரண்டாவது இனிங்ஸில் வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக உமேஷ் யாதவ்வும் தொடரின் நாயகனாக பிறித்திவி ஷாவும் தெரிவாகினர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026