2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், அன்டிகுவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இந்த டெஸ்டின் மூன்றாம் நாளை 8 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைப் தமது முதலாவது இனிங்ஸில் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், மிகுதி இரண்டு விக்கெட்டுகளையும் உடனேயே விஷ்வர் பெர்ணான்டோவிடம் இழந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 271 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், ரஹீம் கொர்ன்வோல் 61, ஜோஷுவா டா சில்வா 46, கைல் மேயர்ஸ் 45, ஜோன் கம்பெல் 42, என்குறுமஹ் பொன்னர் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் 5, டுஷ்மந்த சமீர 2, விஷ்வர் பெர்ணான்டோ 2, லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை, கேமார் றோச்சிடம் ஆரம்பத்திலேயே அணித்தலைவர் திமுத் கருணாரத்னவை இழந்தது. எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த லஹிரு திரிம்மான்ன, ஒஷாத பெர்ணாண்டோவின் இணைப்பில் இலங்கை முன்னிலை பெற்றது.

ஒஷாத பெர்ணான்டோ 91 ஓட்டங்களுடனும், உடனேயே அடுத்து வந்த தினேஷ் சந்திமாலும் கைல் மேயர்ஸிடம் பின்னர் வீழ்ந்ததுடன், குறிப்பிட்ட நேரத்தில் திரிம்மான்னவும் 76 ஓட்டங்களுடன் றோச்சிடம் வீழ்ந்திருந்தார்.

எவ்வாறெனினும், தனஞ்சய டி சில்வா, பத்தும் நிஸங்கவின் இணைப்பில் தமது முன்னிலையை உயர்த்தும் இலங்கை, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

களத்தில், தனஞ்சய டி சில்வா 46, பத்தும் நிஸங்க 21 ஓட்டங்களுடனுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .