Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா தோற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற தென்னாபிரிக்கா தொடரை ஏற்கெனவே வென்ற நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் சனிக்கிழமை (31) நடைபெற்ற இப்போட்டியானது மின்னல் தாக்கத்தால் தலா 16 ஓவர்கள் கொண்ட இனிங்ஸ்கள் உடைய போட்டியாக மாறியது.
இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் மேற்கிந்தியத் தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றபோது மின்னல் தாக்கத்தால் போட்டி மீண்டும் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் போட்டி இனிங்ஸொன்றுக்கு 10 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்ட நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது. ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 48 (22), அணித்தலைவர் ஷாய் ஹோப் 48 (25), றொவ்மன் பவல் 13 (07) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் லுங்கி என்கிடி 2-0-19-1, கவெனா மபஹா 1-0-12-1, ஜோர்ஜ் லின்டி 2-0-9-0, கொர்பின் பொஷ் 2-0-16-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தர்.
பதிலுக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 10 ஓவர்களில் 125 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களையே பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. குயின்டன் டி கொக் 28 (14), ஜேஸன் ஸ்மித் 26 (10), ஜோர்ஜ் லின்டி 17 (09) டெவால்ட் பிறெவிஸ் 17 (10), றயான் றிக்கெல்டன் 15 (07), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 10 (05) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குடகேஷ் மோட்டி 2-0-17-3, ஷாமர் ஜோசப் 2-0-23-1, றொஸ்டன் சேஸ் 2-0-23-0, அகீல் ஹொஸைன் 2-0-25-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக மோட்டியும், தொடரின் நாயகனாக டி கொக்கும் தெரிவாகினர்.
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago