Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டெஸ்ட்களை உள்ளடக்கிய சுற்றுப்பயணத்துக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலங்கை பயணமாகின்றது.
அன்டிகுவாவில் இரசிகர்களில்லாமல் பாதுகாப்புடன் நடைபெறவுள்ள இச்சுற்றுப்பயணத்தின் முதலாவது போட்டியான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகின்றது.
இச்சுற்றுப்பயணத்தின் பகுதியொன்றை சென். லூசியாவில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை நடத்தத் திட்டமிட்டிருந்தபோதும், இலங்கை தாமதமாகச் செல்வதாலும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டியான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஆரம்பிப்பதற்கு முன்பாக சுற்றுப்பயணத்தை முடிக்க வேண்டியிருப்பதால் அது சாத்தியமில்லாமல் போயிருந்தது.
இலங்கையின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், லஹிரு திரிமான்ன ஆகியோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையிலேயே இலங்கை மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வது தாமதமாகியிருந்தது.
1 hours ago
2 hours ago
7 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
26 Jan 2026