Shanmugan Murugavel / 2024 நவம்பர் 03 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், அன்டிகுவாவில் சனிக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் லியம் லிவிங்ஸ்டோன் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் ஷே ஹோப்பின் 117 (127), கேசி காட்டியின் 71 (77), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் 54 (36), ஷிம்ரோன் ஹெட்மயரின் 24 (11), மத்தியூ போர்டேயின் ஆட்டமிழக்காத 23 (11), றொஸ்டன் சேஸின் ஆட்டமிழக்காத 20 (22) ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அடில் ரஷீட், ஜோன் டேர்னர் ஆகியோர் தலா 2, ஜொஃப்ரா ஆர்ச்சர் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 329 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, லிவிங்ஸ்டோனின் ஆட்டமிழக்காத 124 (85), பில் ஸோல்டின் 59 (59), ஜேக்கப் பெதெல்லின் 55 (57), சாம் கர்ரனின் 52 (52) ஓட்டங்களோடு 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் போர்டே 3, சேஸ் மற்றும் ஷாமர் ஜோசப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக லிவிங்ஸ்டோன் தெரிவானார்.
19 minute ago
27 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
29 minute ago
31 minute ago