Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியாவின் அணித்தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
இந்தியா சார்பாக தீபக் ஹூடா அறிமுகத்தை மேற்கொண்டார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், மொஹமட் சிராஜ் (1), பிரசீத் கிருஷ்ணா (2), வொஷிங்டன் சுந்தர் (3), யுஸ்வேந்திர சஹாலிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜேஸன் ஹோல்டர் 57 (71), பேபியன் அலென் 29 (43) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 177 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, றோஹித் ஷர்மாவின் 60 (51), சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 34 (36), தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 26 (32), இஷன் கிஷனின் 28 (36) ஓட்டங்களோடு 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், அல்ஸாரி ஜோசப் 2, அகீல் ஹொஸைன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக யுஸ்வேந்திர சஹால் தெரிவாகினார்.
10 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago