Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூலை 16 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் அவ்வணியை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்ற அவுஸ்திரேலியா, ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (14) முடிவுக்கு வந்த மூன்றாவது போட்டியையும் வென்றமையையடுத்தே 3-0 என்ற ரீதியில் மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது.
மூன்றாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, ஷாமர் ஜோசப் (2), அல்ஸாரி ஜோசப்பிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. கமரன் கிறீன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 204 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், மிற்செல் ஸ்டார்க் (6), ஜொஷ் ஹேசில்வூட், ஸ்கொட் போலண்டிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 176 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ஸ்டார்க் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .