Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், மைன்ஸின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.
பயேர்ண் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும், மைன்ஸ் சார்பாக, ஜொனதன் புர்கர்டி, றொபின் குவைஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங் பிறோட் ஹலான்ட் பெற்றிருந்தார்.
இதேவேளை, பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஐன்ரச்ட் பிராங்பேர்ட்டுக்குமிடையிலான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது. லெவர்குசன் சார்பாக, லியோன் பெய்லி, லூகாஸ் அலரியோ, கெரெம் டெமிர்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிராங்பேர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றார்.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago