2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மொரோக்கோவிடம் தோற்று வெளியேற்றப்பட்ட ஸ்பெய்ன்

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரிருந்து ஸ்பெய்ன் வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற மொரோக்காவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து ஸ்பெய்ன் வெளியேற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாததோடு, மேலதிக நேரத்திலும் கோலெதும் பெறப்படாத நிலையில் பெனால்டியிலேயே 3-0 என மொரோக்கோ வென்றிருந்தது. இதில் மொரோக்கோவின் கோல் காப்பாளர் யசீன் போனோ இரண்டு பெனால்டிகளைத் தடுத்திருந்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற சுவிற்ஸர்லாந்துடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றிருந்தது. போர்த்துக்கல் சார்பாக, கொன்ஸலோ றாமோஸ் மூன்று கோல்களையும், பெப்பே, ரஃபேல் குரைரோ, றஃபேல் லியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். சுவிற்ஸர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை மனுவல் அகஞ்சி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X