2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

யுனைட்டெட்-நியூகஸ்டில் போட்டி சமநிலை

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 13 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், நியூகஸ்டில் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், வெஸ்ட் ஹாம், அஸ்டன் வில்லா ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருந்தன.

மன்செஸ்டர் யுனைட்டெட், நியூகஸ்டில் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நிமிடத்தில் நியூகஸ்டில் அணியின் போல் டும்மெற் பெற்ற கோலின் மூலமாக, அவ்வணி, 3-3 என்ற கோல்கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

இப்போட்டியில் நியூகஸ்டில் சார்பாக போல் டும்மெற் தவிர, 42ஆவது நிமிடத்தில் ஜோர்ஜினியோ விஜ்நல்டும் ஒரு கோலினைப் பெற்றதோடு, போட்டியின் 67ஆவது நிமிடத்தில் அலெக்ஸான்டர் மிற்றோவிக்க்கும் கோல்களைப் பெற்றிருந்தனர். மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, போட்டியின் 9ஆவது நிமிடத்தில் சர்ச்சைக்குரிய பெனால்டி ஒன்றின் மூலம் கோலைப் பெற்ற வெயின் ரூனி, பின்னர் 79ஆவது நிமிடத்திலும் கோலோன்றைப் பெற்றிருந்தார். தவிர, போட்டியின் 38ஆவது நிமிடத்தில் ஜெஸி லிங்கார்ட் கோலொன்றைப் பெற்றிருந்தார்.

இப்போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதன் மூலம், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், நான்காவது இடத்தை, டொட்டேன்ஹாம் அணியுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட் இழந்து, தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஏனைய போட்டிகளில், வெஸ்ட் ஹாம், 3-1 என்ற கோல் கணக்கில் பௌர்ண்மௌத்தை தோற்கடித்ததோடு, அஸ்டன் வில்லா, 1-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பலஸையும் தோற்கடித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .