Shanmugan Murugavel / 2015 நவம்பர் 17 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள யூரோ 2016க்கு அயர்லாந்துக் குடியரசு தகுதி பெற்றுள்ளது. டப்ளினில் இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியின்போது, ஜோன் வோல்ட்டேர்ஸ் பெற்ற இரு கோல்களின் மூலம், 2-0 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா-ஹெர்சிகோவினாவைத் தோற்கடித்து, மொத்தமாக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றே அயர்லாந்துக் குடியரசு யூரோ 2016க்கு தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் அயர்லாந்துக் குடியரசின் டரல் மேர்பியை, பொஸ்னியா-ஹெர்சிகோவினாவின் எர்வின் சுகனோவிக்கை தவறாகக் கையாண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மத்தியஸ்தரினால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பனால்டியிலேயே அயர்லாந்துக் குடியரசின் ஜோன் வோல்ட்டேர்ஸ், கோலினைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலைந வழங்கினார்.
தொடர்ந்து, போட்டியின் இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலினைப் பெற்ற வோல்ட்டேர்ஸ், அயர்லாந்துக் குடியரசின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான தகுதிப் போட்டிகளின் போது, பிரான்ஸூடனான போட்டியில் தியரி ஹென்றியின் கையில் பட்டு பந்து கோலாகியதை, மத்தியஸ்தர் அவதானித்திருக்காத நிலையில், தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தில் தகுதி பெறும் வாய்ப்பை அயர்லாந்துக் குடியரசு இறுதி நேரத்தில் தவறவிட்டிருந்து ஆறு வருடங்களின் பின் உலகளாவிய ரீதியில் பெரிய கால்பந்தாட்ட தொடருக்கு அயர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026