2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

யூரோ 2016: றோமானியாவை வென்றது பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 11 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ஆரம்பித்துள்ள யூரோ 2016 கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில், தொடரினை நடாத்தும் நாடான பிரான்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ், றோமானியா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற குழு ஏ போட்டியின் இறுதிக் கணத்தில் பிரான்ஸின் டிமித்திரி பயேட் பெற்ற கோலின் காரணமாக 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. பிரான்ஸ் சார்பாக பெறப்பட்ட மற்றைய கோலினை ஒலிவர் ஜிரோட் பெற்றிருந்தார்.

கடந்த நவம்பரில், 130 பேர் கொல்லப்பட்ட பரிஸ் தாக்குதல்களின்போது, இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்திய ஸ்டேட் டீ பிரான்ஸ் அரங்கிலேயே மேற்படி போட்டி விளையாடப்பட்ட நிலையில், இப்போட்டியானது உணர்ச்சிபூர்வமாக அமைந்திருந்ததுடன், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டி இடம்பெற்றிருந்தது.

யூரோ 84, 1998ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் என பிரான்ஸில் இறுதியாக இடம்பெற்ற இரண்டு பாரிய தொடர்களில் பிரான்ஸே வென்ற நிலையில், இம்முறையும் பிரான்ஸே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .