Editorial / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் ஞாயிறுக்கிழமை (01)கொண்டுசெல்லப்படுகின்றது.
கிண்ணம் தாங்கிய ஊர்தி, தம்புள்ளையிலிருந்து ஞாயிறுக்கிழமை (01) புறப்பட்டது. அந்த ஊர்தி மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து யாழ்ப்பாணத்தை பிற்பகல் சென்றடையும்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகிய இடங்களுக்குக் கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது.
வடபகுதியின் முக்கிய விளையாட்டு மையமாகத் திகழும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கான விஜயம், அப்பகுதி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago