2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுனைட்டெட்டின் அணித்தலைவராக பொக்பா?

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டை விட்டு அக்கழகத்தின் மத்தியகளவீரரான போல் பொக்பா விலக விரும்புகின்றபோதும், அவர் கழகத்தின் அடுத்த அணித்தலைவராகுவதற்கான பரிசீலனையில் இருப்பதாக அக்கழகத்தின் முகாமையாளர் ஒலெ குனார் சொல்க்ஜர் உறுதிப்படுத்தியுள்ளார்.

யுனைட்டெட்டின் முன்னாள் அணித்தலைவரான அன்டோனியோ வலென்சியா கடந்த பருவகாலத்துடன் கழகத்தை விட்டு விலகிய நிலையில், புதியதொரு அணித்தலைவரை சொல்க்ஜர் தேடுகின்றார்.

அந்தவகையில், அவுஸ்திரேலிய பிறீமியர் லீக் கழகமான பேர்த் குளோரிக்கெதிராக நேற்று  இடம்பெற்ற யுனைட்டெட்டின் சிநேகபூர்வப் போட்டியில், யுனைட்டெட்டின் பின்களவீரரான அஷ்லி யங், மத்தியகளவீரரான ஜுவான் மாத்தா ஆகியோர் அணித்தலைவருக்கான பட்டியை அணிந்திருந்தனர்.

எவ்வாறெனினும், புதிய பருவகாலத்துக்கு முன்னர் இறுதி முடிவொன்று எடுக்கப்படும்போது பொக்பாவும் அணித்தலைவருக்கான பரிசீலனையில் இருப்பார் என சொல்க்ஜர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான காலமானது அடுத்த மாதம் எட்டாம் திகதி முடிவடைந்த பின்னர் பொக்பாவை கைச்சாத்திடுவதற்கான நகர்வை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் மேற்கொண்டால் அதை யுனைட்டெட் ஏற்றுக் கொள்ளாது எனக் கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .