2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டைத் தோற்கடித்த லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா மூன்று கோல்களையும், நபி கெய்டா, டியகோ ஜோட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. வெஸ்ட் ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிஷைல் அன்டோனியோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .