Shanmugan Murugavel / 2023 மார்ச் 06 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியை 7-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, கோடி கக்போ, டர்வின் நுனேஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, றொபேர்ட்டோ பெர்மினோ ஒரு கோலைப் பெற்றார்.
இதேவேளை, நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 63 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 58 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், 49 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 45 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் காணப்படுகின்றன. இதில் யுனைட்டெட் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago