2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யூரோ: விலகல் சுற்றில் டென்மார்க், ஒஸ்திரியா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 22 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் விலகல் முறையிலான சுற்றுப் போட்டிக்கு டென்மார்க், ஒஸ்திரியா, இங்கிலாந்து, செக். குடியரசு, ஜேர்மனி ஆகியன தகுதி பெற்றுள்ளன.

டென்மார்க்கில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ரஷ்யாவுக்குமிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று குழுவில் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாமிடம் பெற்றதையடுத்தே விலகல் முறையிலான சுற்றுக்கு டென்மார்க் தகுதிப் பெற்றுள்ளது.

டென்மார்க் சார்பாக, மிக்கேல் டம்ஸ்கார்ட், யூசுஃப் பெளல்சென், அன்ட்றியாஸ் கிறிஸ்டியென்சன், ஜோகிம் மஹெல்லே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ரஷ்யா சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்டெம் டிஸூபா பெற்றிருந்தார்.

இதேவேளை, றோமானியாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற உக்ரேனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றதைத் தொடர்ந்தே விலகல் முறையிலான சுற்றுக்கு ஒஸ்திரியா தகுதி பெற்றுள்ளது. ஒஸ்திரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டோஃப் பெளம்கார்ட்னர் பெற்றிருந்தார்.

இதேவேளை, இதுவரை நடைபெற்ற போட்டிகளைத் தொடர்ந்து அந்தந்த குழுக்களில் குறைந்தது மூன்றாமிடங்களையாவது உறுதிப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து, செக். குடியரசு, ஜேர்மனி ஆகியனவும் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .