Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடம் பிரேசிலின் ரியோடி ஜெனீரோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் முகமாக ஜமைக்காவின் உசைன் போல்ட், 2016ஆம் ஆண்டு இலண்டன் ஆண்டு விழாப் போட்டிகளில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட், 2012ஆம் ஆண்டு இலண்டனில் ஒலிம்பிக் இடம்பெற்றபோது மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற அதே தடத்துக்கே மீளத் திரும்பவுள்ளார். இந்தப் போட்டிகள், எதிர்வரும் ஜூலை 22, 23ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் டயமாண்ட் லீக் தொடரின் ஒரு அங்கமான இந்த இலண்டன் போட்டிகள், உசைன் போல்ட்டின் ரியோ 2016 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதான இறுதிப் போட்டியாகவிருக்கின்றது.
இருபத்தொன்பது வயதான உசைன் போல்ட், இவ்வருடம் பெய்ஜிங்கில் இடம்பெற்ற உலக சம்பியன்ஷிப்பில் 100 மீற்றர், 200 மீற்றர், 4*100 மீற்றர் அஞ்சல் போட்டிகளில் தனது பட்டத்தை தக்கவைத்திருந்தார்.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago