Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 26 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் போட்டிகளின் பிரதான புகழுக்குக் காரணமே அந்தந்த ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் என்னும் மூலதனம் தான். அந்தந்த அணியின் கேப்டனாகட்டும், அந்தந்த அணிகளின் வீரர்களாகட்டும் சாதி, மத, பிராந்திய, மொழி பேதமின்றி ‘இவரு நம்ம ஆளு’ என்று ரசிகர்கள் நினைப்பதுதான் ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு முக்கியமான காரணம். எந்த ஒரு வர்த்தகமும் விளையாட்டும் அதில் பங்கு பெறுவோரின் ரசிக நன்மதிப்பை வைத்தே வெற்றியோ தோல்வியோ அடைகிறது.
தோனியை எப்படி 'தல' என்று சென்னை ரசிகர்கள் உச்சியில் கொண்டு வைத்தனரோ, கோலியை எப்படி பெங்களூரு ரசிகர்கள் விரும்புகின்றனரோ, ஏன் ஏ.பி.டிவில்லியர்ஸை எப்படி கர்நாடக ரசிகர்கள் ஆராதித்தனரோ, அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் கேப்டனான போது அவரை தங்கள் ஆள் என்று குஜராத் ரசிகர்கள் ஆராதித்தனர்.
ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியவுடன் ஹர்திக் பாண்டியா தன் ரசிகர்கள் பட்டாளத்தை இழந்தார் என்பதோடு அவர்களின் நன்மதிப்பை இழந்து மும்பை-குஜராத் ஐபிஎல் போட்டியின் போது கடுமையாக கேலிக்கும் கிண்டலுக்கும் ரசிகர்களின் கோப ஆவேசத்துக்கும் ஆளானார்.
ஆனால், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் மற்றொரு பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாவுவது எப்படி இயற்கையோ அதேபோல்தான் இதையும் பார்க்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வர்த்தக உலகில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற வசனத்திற்கேற்ப ஒரு வீரர் பொருளாதார நலன்களைப் பார்க்கவே கூடாது, ஒரே முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறான லட்சியவாதமே.
ஹர்திக் பாண்டியாவை மும்பைக்கு அளித்ததன் முழு பணப்பயன் குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளர்களுக்குத்தான். ஹர்திக் பாண்டியா அந்தத் தொகையில் உரிமை கோர முடியாது, உரிமையாளர்கள் கொடுத்தால் உண்டு, இல்லையெனில் இல்லை. இதில் விசுவாசம் எங்கிருந்து வரும்?. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் விருப்பம் இல்லாமல், அவரை வேறொரு அணிக்கு மாற்ற முடியாது.
ஆனால் ரசிகர்களின் கோபத்திற்கு தர்க்கக் காரணங்களெல்லாம் தேவையில்லை. பகுப்பறிவின் மூலம் கும்பல் மனோபாவம் முடிவெடுக்காது. அவர்களுக்கு ‘எங்க ஆள்னு உன்ன நம்பினோமேடா இப்படி மும்பைக்குப் போயிட்டியே’ என்ற உணர்ச்சி மேலிடல் மட்டுமே போதும், ஹர்திக் பாண்டியா தன் ரசிகர்கள் பலத்தை இழப்பதற்கு.
30 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
6 hours ago