2025 மே 21, புதன்கிழமை

ராஜஸ்தானை வென்றது டெல்லி

Editorial   / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ்க்கு எதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 6
விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 43 (32), சிம்ரோன் ஹெட்மையர் 28(16), ரிஷப் பண்ட் 24(24) ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் (2) சேட்டன் சக்கரியா (2) விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு, 155 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 70(53), மஹிபால் லோம்றொர் 19(24) ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில் அன்றிச் நொர்ட்ஜே (2) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X