2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

ரொனால்டோவை அழ வைத்தார் மொரின்யோ: மோட்ரிச்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளராக ஜொஸே மொரின்யோ காணப்படும்போது ஒரு தடவை கிறிஸ்டியானோ ரொனால்டோவை அழ வைத்ததாக அப்போது அவரின் சக வீரராகக் காணப்பட்ட லூகா மோட்ரிச் புதன்கிழமை (31) தெரிவித்துள்ளார்.

முன்களவீரரான ரொனால்டோ தன்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் வழங்கியிருந்த நிலையில் ஒரு தடவை எதிரணியின் பின்களவீரரை துரத்திச் செல்லாததால் அவரை வீரர்கள் ஓய்வறையில் மொரின்யோ அழச் செய்ததாக மோட்ரிச் கூறியுள்ளார்.

மொரின்யோவின் கீழ் மட்ரிட்டில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையில் ரொனால்டோ விளையாடியிருந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .