2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

றோமாவை வென்றது றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக்கின், இறுதிப் பதினாறு அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியொன்றில் ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தனது வாய்ப்பை அதிகமாக்கிக் கொண்டுள்ளது.

இத்தாலியின் தலைநகர் றோமில், றோமா அணியின் மைதானத்தில் கடந்த புதன்கிழமை (17) இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில், றியல் மட்ரிட் அணியும் றோமா அணியும் மோதியிருந்த நிலையில், 2-0 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் 57ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலைப் பெற்றதுடன், போட்டியின் 86ஆவது நிமிடத்தில் ஜெஸி ஒரு கோலைப் பெற்றிருந்தார்.

போட்டிக்கு முந்தைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், றியல் மட்ரிட் மைதானத்தினை விட்டு வெளியே இடம்பெறும் போட்டிகளில் கோல்களைப் பெறுவதில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அவ்வூடகவியலாளர் மாநாட்டிலிருந்து இடையிலிருந்து வெளியேறிய ரொனால்டோ, இப்போட்டியில் பெற்ற கோலின் மூலம் தனது கால்களினால் பதிலளித்துள்ளார். தவிர இப்போட்டியின் நாயகனாகவும் ரொனால்டோவே தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .