Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான ஹொக்கி இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்த ஆர்ஜென்டீனா, முதற்தடவையாக ஆண்களுக்கான ஹொக்கியில் தங்கம் வென்றது.
டன்கை கொஸைன்ஸ் பெற்ற கோல் மூலமாக ஆரம்பத்தில் பெல்ஜியம் முன்னிலை பெற்ற போதும், பப்லோ இபர்ரா, இக்னாசியோ ஒரிட்ஸ், கொன்ஸலோ பெய்ல்லட் ஆகியோர் பெற்ற கோல்களின் மூலமாக முதற்பாதி முடிவுக்குள்ளேயே ஆர்ஜென்டீனா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கௌதீர் போச்சார்ட் பெற்ற கோலின் மூலம் பெல்ஜியம் போராட்டத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இறுதி நிமிடத்தில் ஒகஸ்ட்டின் மஸ்ஸில்லி பெற்ற கோலின் மூலம் ஆர்ஜென்டீனா தனக்கான தங்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.
இம்முறை றியோவில் தங்கம் வெல்வதற்கு முன்னர், ஒலிம்பிக் ஆண்கள் ஹொக்கியில் ஆர்ஜென்டீனா அரையிறுதிக்கே முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனி, நெதர்லாந்துக்கிடையேயான வெண்கலப் பதக்கதுக்கான போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில், வெற்றி பெறும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட பெனால்டியில், 4-3 என்ற ரீதியில் வெற்றி பெற்ற ஜேர்மனி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago