Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டிகளின் தீர்ப்புகளை மீளாய்வு செய்த சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு, சில நடுவர்களை நீக்கியுள்ளது. றியோவில் இடம்பெற்ற 239 குத்துச் சண்டைப் போட்டிகளின் முடிவில், சில போட்டிகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இருக்கவில்லை என சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதேவேளை, தாம் மாற்றமடையும் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு, எவ்வாறெனினும் ஏற்கெனவே முடிவடைந்த குத்துச் சண்டைப் போட்டிகளின் முடிவுகள் மாற்றப் படாது என்றும் ஏற்கெனவே வழங்கப் பட்டது போலவே இருக்கும் என சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய விதத்தில் அயர்லாந்து வீரர் மைக்கல் கொன்லன் தோல்வியடந்தமையைத் தொடர்ந்து ஏற்பட்ட விமர்சனங்களாலேயே சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
மைக்கல் கொன்லன் இலகுவாக வெற்றி பெற்றார் என பல பார்வையாளர்கள் உணர்ந்திருந்த நிலையில், ரஷ்யாவின் விளாடிமிர் நிகிட்டின் வெற்றி பெற்றதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியிலிருந்து நிகிட்டின் விலகியுள்ள போதும், அவர் ரஷ்யாவுக்கு வெண்கலப் பதக்கத்துடனே திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago