Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 23 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடந்து முடிந்த றியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க அணி, 46 தங்கங்கள், 37 வெள்ளிகள், 38 வெண்கலங்கள் என, மொத்தமாக 121 பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றமை அனைவரும் அறிந்ததே.
இதில் குறிப்பிடத்தக்கதாக, அந்நாட்டின் பெண்கள், 27 தங்கங்களைக் குவித்திருந்தனர். அமெரிக்கப் பெண்கள் அணியென்பது தனிநாடாக இருந்திருந்தால், முதலிடத்தில் பெரிய பிரித்தானியோவோடு இணைந்து காணப்பட்டிருக்கும்.
இந்நிலைமை இவ்வாறிருக்க, சில நாடுகளின் அணிகள் (சுயாதீன அணி தவிர), சிறப்பான பெறுபேறுகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டன.
குறிப்பாக, ஒரு இலட்சத்துக்குச் சற்று அதிகமான சனத்தொகையை மாத்திரம் கொண்ட கிரேனடா, வெள்ளிப் பதக்கமொன்றைப் பெற்றுக் கொண்டது. இதன்படி அந்நாட்டில், ஒரு மில்லியன் பேருக்குச் சராசரியாக 9.36 பதக்கங்கள் பெறப்படும். இந்த அளவீட்டில் அந்நாடே முதலிடம் வகிக்கிறது.
தொடர்ந்து பஹாமஸ் (2 பதக்கங்கள் - 377,374 பேர் - ஒரு மில்லியனுக்கு 5.15 பதக்கங்கள்), ஜமைக்கா (11 பதக்கங்கள் - 2,950,210 பேர் - ஒரு மில்லியனுக்கு 4.04 பதக்கங்கள்), நியூசிலாந்து (18 பதக்கங்கள் - 4,708,450 பேர் - ஒரு மில்லியனுக்கு 3.92 பதக்கங்கள்), டென்மார்க் (15 பதக்கங்கள் - 5,707,251 பேர் - ஒரு மில்லியனுக்கு 2.64 பதக்கங்கள்) ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இறுதியில் இந்தியா (1.252 பில்லியன் பேர் - 2 பதக்கங்கள்), இந்தோனேஷியா (249.9 மில்லியன் பேர் - 3 பதக்கங்கள்), பிலிப்பைன்ஸ் (102.9 மில்லியன் பேர் - 1 பதக்கம்) ஆகியன காணப்படுகின்றன.
இதேவேளை, 56 வீரர்களோடு களமிறங்கிய அஸெர்பைஜான், ஒரு தங்கம், 7 வெள்ளிகள், 10 வெண்கலங்கள் உட்பட 18 பதக்கங்களை வென்றது. இதன்படி, ஒரு வீரருக்குச் சராசரியாக 0.32 பதக்கங்கள் கிடைத்தன. இந்த அளவீட்டில், அந்நாடே முதலிடம் பெறுகிறது.
தொடர்ந்து எதியோப்பியா (38 வீரர்கள் - 8 பதக்கங்கள் - சராசரி 0.24), ஐக்கிய அமெரிக்கா (567 வீரர்கள் - 121 பதக்கங்கள் - சராசரி 0.22), வடகொரியா (31 வீரர்கள் - 7 பதக்கங்கள் - சராசரி 0.2), ரஷ்யா (286 வீரர்கள் - 56 பதக்கங்கள் - சராசரி 0.2) ஆகியன காணப்படுகின்றன.
57 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
6 hours ago