2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: 200 மீற்றரிலும் போல்டுக்கு ஹட்ரிக் தங்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றிருந்த ஜமைக்காவின் உசைன் போல்ட், இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று, 2008ஆம் ஆண்டு பீஜிங், 2012ஆம் ஆண்டு இலண்டன், தற்போது 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக் என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீற்றர், 200 மீற்றர் இறுதிப் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்றுள்ளார்.

இதேவேளை, நாளை காலை காலை 7.05க்கு இடம்பெறவுள்ள 4*100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் தங்கம் வென்று, தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் தனது மூன்று தங்கப் பதக்கங்களையும் தக்க வைக்கும் வாய்ப்பை தக்க வைத்துள்ளார்.

போட்டித் தூரத்தை 19.78 செக்கன்களில் கடந்து போல்ட் தங்கம் வென்றதுடன், போட்டித் தூரத்தை 20.02 செக்கன்களில் கடந்து கனடாவின் அன்ட்றே டி கிறாஸே வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், போட்டித் தூரத்தை 20.12 செக்கன்களில் கடந்து பிரான்ஸின் கிறிஸ்டோபே பிளிமேத்தோ வெண்கலப் பதக்கம் வென்றார். பிரித்தானியாவின் அடம் கெமிலியும் 20.12 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்த போதும் கண நேரத்தில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டிருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீரரும் நீளம் பாய்தல் வீரருமான கார்ல் லூயிஸும் பின்லாந்தின் நீண்ட தூர ஓட்ட வீரரான பாவோ நுர்மியுமே, தடங்களங்களில் போல்டை விட அதிமான தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

1984ஆம் ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் லூயிஸ் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றதுடன், 1920ஆம் ஆண்டுக்கும் 1928ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நுர்மியும் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .