Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுக் கொண்டிருக்கும் றியோ ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில், பஹ்ரேயினின் யுனிஸ் கிர்வாவைத் தோற்கடித்த கென்யாவின் ஜெமிமா சும்கொங் தங்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் மரதனோட்டப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது கென்ய பெண்மணியாக தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.
31 வயதான சும்கொங், 42.195 கிலோமீற்றர் கொண்ட போட்டித் தூரத்தை, இரண்டு மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் நான்கு செக்கன்களில் கடந்திருந்தார். எதியோப்பியாவின் உலக சம்பியனான மரே டிபாபா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதுடன், அவரது சக வீராங்கனையும் போட்டியை வெல்வார் எனவும் கருதப்பட்ட டிஜிஸ்ட் டுஃபா, போட்டித் தூரத்தின் அரைப் பகுதிக்கு முன்னரே போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த சும்கொங், தான் இப்போட்டியில் தோற்பேன் என, எப்போதும் கவலைப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ளார். 40 கிலோமீற்றரிலேயே தனக்குத்தான் தங்கம் எனத் தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ள அவர், 35 கிலோமீற்றரில் தனது சக அணி வீராங்கனைகள் விலகியதை தான் அவதானித்ததாகவும், அதுவே தான் வெல்ல வேண்டும் என்று ஊக்கத்தை வழங்கியதாக கூறியுள்ளார்.
7 minute ago
8 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago