Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற றியல் மட்ரிட், மலாகா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தன.
இப்போட்டியில், றியல் மட்ரிட் சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 33ஆவது நிமிடத்தில் டொனி குரூஸினால் அடிக்கப்பட்ட ‘ப்ரீ கிக்’கை தலையால் முட்டி றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கினார். எனினும் அவர் அப்பந்தை ‘ஓப் சைட்’இலிருந்தே பெற்றார் என சர்ச்சை நிலவியிருந்தது. பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ வீழ்த்தப்பட்டதையடுத்து வழங்கப்பட்ட பெனால்டியை அவர் கோலாக்க தவறியிருந்தார். பின்னர், போட்டியின் 66ஆவது நிமிடத்தில் மலாகா அணியின் ராபுல் அல்பென்டோஸ, ஒரு கோலைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.
இப்போட்டியில், காயம் காரணமாக றியல் மட்ரிட் அணியின் கரிம் பென்ஸீமா, கரத் பேல் ஆகியோர் பங்கேற்காத நிலையிலும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட ரஃபேல் வரானே ஆகியோர் பங்கேற்காத நிலையிலும் அவ்வணியின் பின்களம் பலமற்றதாக காணப்பட்ட நிலையில், கோல்காப்பாளர் நவாஸ் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.
இப்போட்டியின் முடிவில் 54 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்தில் இருப்பதுடன் 55 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்தையும் 63 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலாமிடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .