2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

றொஸ்பேர்க்குக்கு ஹமில்டன் நன்றி தெரிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 30 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனவானாக நடந்து கொண்டு, தன்னை முந்த விட்டு, மொனாக்கோ கிரான்ட் பிறிக்ஸை தான் வெல்ல உதவியமைக்கு சக மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்குக்கு பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

பந்தயத்தின் ஆரம்பத்தில் தனது வேகத்தை அதிகப்படுத்த தடுமாறியமையையடுத்து, ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் ரிக்கார்டோவுக்காக அடுத்ததாக இரண்டாவதாக ஹமில்டனை செல்ல அனுமதிக்குமாரு றொஸ்பேர்க்குக்கு மெர்சிடிஸ் அணியினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரெட்புல் அணியின் நிறுத்தத்தில் ஏற்பட்ட தாமதத்தால் முன்னிலைக்கு வந்த ஹமில்டன், அடுத்த 45 சுற்றுக்களிலும் ரிக்கார்ட்டோவை முந்த விடாமல் பந்தயத்தை முடித்து 2016ஆம் ஆண்டில் தனது முதல் வெற்றியைப் பெற்று, இவ்வருடத்துக்கான ஃபோர்முயுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகளில், தனக்கும் றொஸ்பேர்க்குமிடையிலான வித்தியாசத்தை 24ஆக குறைத்துக் கொண்டுள்ளார்.

மேற்படி மொனாக்கோ பந்தயத்தில் ரிக்கார்டோ இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், ஃபோர்ஸ் இந்தியா அணியின் மெக்ஸிக்கோச் சாரதியான சேர்ஜியோ பெரேஸ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். சம்பியன்ஷிப் புள்ளிகளில் தற்போது முதலிடத்தில் உள்ள றொஸ்பேர்க், ஏழாவது இடத்தையே பிடித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .