Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட், கடிஸுக்கு இடையிலான போட்டியில் அந்தோனி லொஸானோ பெற்ற கோலால் 0-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோல்வியடைந்தது.
இதேவேளை, கெட்டாபேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பார்சிலோனா, கெட்டபேக்கிடையிலான போட்டியில் ஜேமி மாத்தா பெற்ற கோலால் 0-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்தது.
இந்நிலையில், கிரனெடாவில் நேற்றிரவு நடைபெற்ற செவில்லாவுக்கும், கிரனெடாவுக்குமிடையிலான போட்டியில் யங்கெல் ஹெரேரா பெற்ற கோலால் 0-1 என்ற கோல் கணக்கில் செவில்லா தோல்வியடைந்ந்தது.
இதேவேளை, செல்டா விகோவின் மைதானத்தில் நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, லூயிஸ் சுவாரஸ், யனிக் கராஸ்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
53 minute ago