Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று அதிகாலை இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வீழ்த்தியிருந்தது.
தமது மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட்டை பரிஸ் ஸா ஜெர்மைன் வீழ்த்தியிருந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா இரண்டு கோல்களையும், தோமஸ் மெனுயுனியர் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இத்தாலிய சீரி கழகமான ஜுவென்டஸுடனான குழு டி போட்டியொன்றை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் முடித்துக் கொண்டது. ஜுவென்டஸ் சார்பாக, ஜுவான் குவாட்ராடோ, பிளெய்ஸி மத்தியூடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக ஸ்டெஃபான் சவிச், ஹெக்டர் ஹெரெரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், கிரேக்கக் கழகமான ஒலிம்பியாகோஸின் மைதானத்தில் அவ்வணியுடன் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற குழு பி போட்டியொன்றை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முடித்துக் கொண்டது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன், லூகாஸ் மோரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஒலிம்பியாகோஸ் சார்பாக, டானிட்யல் பொடென்ஸ், மத்தியூ வல்புவேனா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்க்கின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ், இல்கி குன்டோகன், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சேர்பியக் கழகமான சிர்வெனா ஸவெஸ்டாவுடனான குழு பி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, கிங்ஸ்லி கோமன், றொபேர்ட் லெவன்டோஸ்கி, தோமஸ் மல்லர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
18 minute ago
43 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
5 hours ago
27 Jan 2026