Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 09:35 - 1 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பரம வைரிக் கழகங்களான பார்சிலோனா, றியல் மட்ரிட் அணிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் றியல் மட்ரிட்டை பார்சிலோனா வீழ்த்தியது.
தமது மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் 11ஆவது நிமிடத்தில் பிலிப் கோச்சினியோ பெற்ற கோலுடன் ஆரம்பத்திலேயே பார்சிலோனா முன்னிலை பெற்றது.
தொடர்ந்த ஆட்டத்தில், பார்சிலோனாவின் முன்கள வீரர் லூயிஸ் சுவாரஸ் மீது விதிமுறைகளை மீறி றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் ரபேல் வரான் நடந்து கொள்ள, காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் உதவியுடன் வழங்கப்பட்ட பெனால்டியை போட்டியின் 30ஆவது நிமிடத்தில் சுவாரஸ் கோலாக்க தமது முன்னிலையை பார்சிலோனா இரட்டிப்பாக்கிக் கொண்டது.
பின்னர் போட்டியின் இரண்டாவது பாதியில் தமது பின்கள வீரர் மார்ஷெலோ நெஞ்சால் கோலைப் பெற முன்னிலையை ஒரு கோலால் றியல் மட்ரிட் குறைத்தது. எனினும் 75ஆவது நிமிடத்தில் சுவாரஸ் தலையால் முட்டிப் பெற்ற கோலோடு இரண்டு கோல் முன்னிலையை மீண்டும் பெற்ற பார்சிலோனா, அடுத்த எட்டாவது நிமிடத்தில் சுவாரஸ் பெற்ற கோலோடு 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றதோடு, மாற்று வீரராகக் களமிறங்கிய அர்துரோ விடால் போட்டியின் 87ஆவது நிமிடத்தில் பெற்ற கோலோடு இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
SABIR Tuesday, 30 October 2018 07:22 AM
awesome
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026