2025 ஜூலை 05, சனிக்கிழமை

றியல் மட்ரிட்டை வென்றது பயேர்ண் மியூனிச்

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளைக் கொண்ட ஏழாவது சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், ஆர்சனல் ஆகியவை வென்றுள்ளன.

அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டனில் இடம்பெற்ற போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டை 3-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் வென்றிருந்தது. பயேர்ண் மியூனிச் சார்பாக கொரென்டின் டொலிஸோ, றொபேர்ட் லெவன்டோஸ்கி, சேர்ஜி நர்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றிருந்தார்.

இதேவேளை, சிங்கப்பூரின் கல்லங்கில் இடம்பெற்ற போட்டியில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனை 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மேஸன் கிறீன்வூட் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்திலுள்ள சார்லொட்டில் இடம்பெற்ற போட்டியில் இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவை எதிர்கொண்ட ஆர்சனல், 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆர்சனல் சார்பாக எட்வேர்ட் நிக்கெட்டியா இரண்டு கோல்களையும், ஜோ வில்லொக் ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .